இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையே முறுகல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. சைப்பிரஸ் நாடு இஸ்ரேலுடன் பொருளாதார உறவு வைத்த காரணத்தால் கோபமடைந்த துருக்கிய கப்பற்படை சைப்பிரசிற்குள் நுழைந்துள்ளது. இஸ்ரேலிய- அமெரிக்க தொடர்புடைய நிறுவனம் ஒன்று சைப்பிரசில் எரிவாயுவை எடுப்பதற்கான துளைகளை போட ஆரம்பித்ததே துருக்கிக்கு கடும் கோபத்தை விளைவித்துள்ளது. கடந்த செவ்வாயன்று துருக்கிய யுத்தக்கப்பல்கள் இஸ்ரேலை அண்டிய கடற்பகுதிக்குள் நுழைந்ததும், இஸ்ரேலிய எப் 16 விமானங்கள் இரண்டு யுத்தக்கப்பல்களுக்கு மிக தாழ்வாக எச்சரிக்கை பறப்பு மேற்கொண்டதும் தெரிந்ததே. இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கும் இடையே போரை மூட்டக்கூடிய கணப்பொழுதுகளாக இருந்துள்ளன. கடந்த 1974ல் இருந்தே சைப்பிரசின் சுதந்திரத்தை துருக்க அனுமதிக்க மறுத்து வருகிறது. இந்த நிலையில் சைப்பிரஸ் துருக்கியுடன் கொண்ட உறவு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – துருக்கி மோதல் ஏற்படக்கூடிய கொதி நிலை தொடர்ந்து இருந்து வருகிறது.
2.10.11
இஸ்ரேல் துருக்கி முறுகல் யுத்தக்கப்பல்கள் சைப்பிரசிற்குள் நுழைந்தன

இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
லேபிள்கள்:
இஸ்ரேல்,
சைப்பிஸ்ர,
துருக்கி,
யுத்தக்கப்பல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக