தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.11.11

ஓடுபாதையில் தேங்கிய மழைநீர்:7 விமானங்கள் தாமதம்


மீனம்பாக்கம், நவம்பர் 26- சென்னையில் பெய்து வரும் கன மழையைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் மழைநீர் தேங்கியது. இதனால் 7 விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சென்னை, அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று கனத்த மழை பெய்ததால் விமான ஓடுபாதையில் மழைநீர் தேங்கிவிட்டது. இதன் காரணமாக,
மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த ஏர் இந்தியா விமானம், டெல்லியிலிருந்து சென்னை வந்த இரண்டு விமானங்கள், பெங்களூரிலிருந்து வந்த விமானம் மற்றும் மதுரையிலிருந்து வந்த விமானம் என ஐந்து உள்நாட்டு விமானங்கள் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதுதவிர சிங்கப்பூரிலிருந்து வந்த டைகர் ஏர்லைன்ஸ், கோலாலம்பூரிலிருந்து வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்களும் தரையிறங்க இயலவில்லை. இதனால் மொத்தம் 7 விமானங்கள் விமானத்தைச் சுற்றி சுற்றி பறந்தன.
இதனைத் தொடர்ந்து ஓடு பாதையில் தேங்கியிருந்த மழை நீரை ஊழியர்கள் விரைவாக வெளியேற்றினர். மழை காரணமாக சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

0 கருத்துகள்: