தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.11.11

நேட்டோ படை தாக்குதலில் 25 பாக்.வீரர்கள் பலி

பாகிஸ்தான் இராணுவம் மீது நேட்டோ ஹெலிகாப்டர்கள் நடத்திய தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் பலியாயினர். 

தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தானில் `நேட்டோ' படையினர் முகாமிட்டுள்ளனர். 

இந்நிலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் முகமது மலைப்பகுதியில் நேட்டோ படையின் ஹெலிகாப்டர்கள் அத்துமீறி புகுந்தன. 

பின்னர் இராணுவ சோதனை சாவடியின்மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. அதில் 25 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என தெரியவில்லை. 


இதுகுறித்து `நேட்டோ' செய்தி தொடர்பாளர் கூறும் போது, "ஆப்கானிஸ்தான் எல்லையில் இச்சம்பவம் நடந்துள்ளது.அதற்கான காரணம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றார்

0 கருத்துகள்: