தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.11.11

மும்பை கிரார்போர்ட் சந்தையில் தீ : 500 க்கு மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்


மும்பையின் கிராவ்ஃபோர்ட் சந்தை பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 500 க்கு மேற்பட்ட கடைகள் எரிந்துநாசமாகியுள்ளன.இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் தீ பற்றிய செய்தி அறிந்து உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வராததால், பொருட்சேதம் அதிகமாகியுள்ளதாக கடை உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முகமது அலி சாலையில் உள்ள சஹாரா, மனிஷ் என்ற பெயரில் இயங்கிவந்த சந்தையின், மின்னணு மற்றும் அழகு சாதனங்கள் விற்கப்படும் நூற்றுக்கணக்கான கடைகளும், இத்தீயில் எரிந்து சாம்பலாகின.

வெகு நேரத்திற்கு பிறகு சுமார் 20 ற்கு மேற்பட்ட தீயணைப்பு படை வண்டிகள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளன. தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை எனவும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் மும்பை மாநகராட்சி ஆணையர் சுபோத் குமார் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: