தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.11.11

எகிப்தில் இராணுவம் தோல்வி

கடந்த சில தினங்களாக எகிப்தில் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் நேற்று வெள்ளி தொழுகைக்குப் பின்னர் மிகவும் பிரமாண்டமான பேரணியாக உருவெடுத்தது. எகிப்திய தலைநகர் கெய்ரோவில் உள்ள தாகிர் பிளேசில் சுமார் ஓர் இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடி ஆர்பாட்டங்களை முன்னெடுத்தார்கள். ஒரு சர்வாதிகாரியை கலைத்துவிட்டு அவனை விட மோசமான சர்வாதிகாரியாக
குடிபுகுந்துள்ள இராணுவ நாகங்களை பதவியில் இருந்து விலகும்படி மக்கள் கோஷமிட்டனர். கறையான் புற்றுக்கட்ட நாகம் புகுந்தது போல நடைபெறும் இராணுவ அலங்கள் மக்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. ஆர்பாட்டத்தின் வீரியம் காரணமாக இராணுவத்திலிருந்தும், போலீசில் இருந்தும் பலர் தலை தெறிக்க ஓட ஆரம்பித்துள்ளனர். மக்கள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. தயவு செய்து ஆர்பாட்டங்களை நிறுத்துங்கள் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. எகிப்தில் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெற வெறும் மூன்று தினங்களே இருக்கும்போது இந்த ஆர்பாட்டம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஒன்று திரண்டால் வெற்றி பெறும் காலம் கனிந்துவிட்டதை இந்த நிகழ்வு எடுத்துரைக்கிறது.

0 கருத்துகள்: