25.10.10
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு தடை
உதகை, அக். 24: ஆர்எஸ்எஸ் நிறுவன தினத்தையொட்டி உதகையில் நடத்த திட்டமிட்டிருந்த அணிவகுப்பு ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 186 பேர் கைது செய்யப்பட்டனர். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) துவங்கியது விஜயதசமி தினத்தில் என்பதால் ஆண்டுதோறும் விஜயதசமியை ஒட்டி, அந்த அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் குன்னூரிலும், அதற்கு முந்தைய ஆண்டில் கோத்தகிரியிலும் இத்தகைய அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன. நடப்பாண்டுக்கான ஊர்வலத்தை ஞாயிற்றுக்கிழமையன்று உதகையில் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதி கோரியிருந்தது. உதகை மத்திய பேருந்து நிலைய வளாகத்திலிருந்து காந்தி மைதானத்தை வந்தடைந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெறுமென மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் என்.கே.கிருஷ்ணமூர்த்தி அறிவித்திருந்தார். ஆனால், ஊர்வலம் செல்ல அவர்கள் கேட்டிருந்த பாதையை ஒதுக்க காவல் துறையினர் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், தடையை மீறி ஊர்வலத்தை நடத்துவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அறிவித்திருந்ததால், நகரில் ஞாயிற்றுக்கிழமையன்று பெரும் பரபரப்பு நிலவியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமார் தலைமையில் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட போலீஸôரும், அதிவிரைவுப் படையினரும் குவிக்கப்பட்டனர். மத்திய பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் உதகை வந்திருந்தனர். அனைவரும் சீருடைகளுடன் இருந்தனர். பிற்பகல் 2.30 மணி வரை காவல்துறையினர் அனுமதி அளிக்காததால் தடையை மீறி ஊர்வலம் செல்ல முடிவெடுத்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக