மும்பை, பிப். 15- காதலர் தின எதிர்ப்பை சிவசேனை கைவிட்டுவிட்டது.காதலர் தின கொண்டாட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்த சிவசேனை கட்சி, இந்த ஆண்டு அத்தகைய எதிர்ப்பைக் கைவிட்டதாக அதன் இளைஞர் பிரிவு தலைவர் ஆதித்யா தெரிவித்தார். இவர் சிவசேனை தலைவர் பால் தாக்கரேயின் பேரனாவார். தேர்தலில் இளம் தலைமுறையைக் கவர்வதற்காக காதலர் தின எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.