தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.2.11

இப்போதைக்கு புதிய மந்திரிசபை இல்லை: எகிப்து பிரதமர்


கெய்ரோ, பிப். 15 எகிப்தில் இப்போதைக்கு புதிய மந்திரிசபை அமைக்கப்படமாட்டாது. அதற்கு அவசரமில்லை என அந்நாட்டு பிரதமர் அகமது ஷாபிக் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் அதிபர் முபாரக்கை பதவி விலகக்கோரி கடந்த 17 நாட்களாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். தரிர் சதுக்கத்தில் குவிந்த லட்சக்கணக்கான மக்களின் ஆர்ப்பாட்டத்தால் அதிர்ந்து போன
முபாரக் முதலில் பதவி விலக மறுத்தார். பின்னர் தான் பதவி விலகுவதாக அறிவித்தார். தற்போது எகிப்தில் சகஜ நிலை திரும்பியுள்ளது.
இந்நிலையில் நேற்று எகிப்து பார்லிமென்ட் கலைக்கப்பட்டது. அரசியலைப்பு சட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரதமர் அகமத் ஷாபிக் முதன்முதலாக செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், எகிப்து மக்களுக்கு தற்போதை அரசின் மீது முழு நம்பிக்கை ஏற்படும் வரையில் புதிய மந்திரிசபை அமைக்கப்படமாட்டாது. அதற்கு அவரசமும் இல்லை. முதற்கட்டமாக அத்தியாவசியப் பொருட்கள் விலை மற்றும் உணவுப்பொருட்களின் விலைகளை குறைக்கவும். மானிய விலையில் உணவுப்பொருட்கள் திட்டத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அகமத் ஷாபிக் கூறினார்

0 கருத்துகள்: