ரமல்லா, பிப். 15 பிரதமர் சலாம் பயாத் தலைமையிலான பாலஸ்தீன அமைச்சரவை திடீரென இன்று ராஜிநாமா செய்தது. தனது அமைச்சரவையின் பதவி விலகல் கடிதத்தை அதிபர் மெக்மூத் அப்பாஸிடம் பயாத் நேற்று காலை வழங்கினார்.வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள ரமல்லா நகரில் நேற்று அதிகாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் பாலஸ்தீனத்தில் அதிபர் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும்
நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக மறைந்த பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கம் அதிபருக்கு கெடு விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதமே பொதுத் தேர்தலை நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், ஹமாஸ் இயக்கத்தின் மிரட்டலால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து அமைச்சரவையை மாற்றியமைக்கப் போவதாக கடந்த நவம்பரில் அதிபர் அப்பாஸ் அறிவித்தார். ஆனால், துனிசியாவிலும் அதைத் தொடர்ந்து சூடான், எகிப்திலும் நடந்த மக்கள் புரட்சியால் அந்தத் திட்டமும் தாமதமாகி வந்தது.
ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அரசியல் பிரிவான பதா இயக்கங்கள் இடையிலான மோதலால் பாலஸ்தீனத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தை ஆளும் அதிபர் அப்பாஸ் பதா இயக்கத்தைச் சேர்ந்தவர். ஆனால், நாட்டின் காசா பகுதியை ஹமாஸ் அரசிடமிருந்து கைப்பற்றி ஆண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக