தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.2.11

உச்ச நீதிமன்ற நீதிபதி லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்தேன்: காங்கிரஸ் எம்.பி.


திருவனந்தபுரம், பிப்.14 உச்ச நீதிமன்ற நீதிபதி லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள காங்கிரஸ் (பி) கட்சியின் தலைவர் பாலகிருஷ்ண பிள்ளைக்கு, ஊழல் வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் 1 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. தண்டனை பெற்ற அவருக்கு தார்மீக ஆதரவு வழங்கும் விதத்தில், கேரள மாநில காங்கிரஸ் கூட்டணி சார்பில் கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கராவில்
பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாகரன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் லஞ்சம் வாங்கியதை தான் நேரில் பார்த்ததாக குறிப்பிட்டார். கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்த பார் லைசென்சை திரும்பப்பெறுவதற்காக தொடரப்பட்ட வழக்கில், அந்த நீதிபதி லஞ்சம் வாங்கியதாக பகிரங்கமாக அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்.பி.யின் இந்த புகார் குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் கேரள பார்கவுன்சில் வற்புறுத்தி உள்ளது. லஞ்சம் வாங்கிய நீதிபதியின் பெயரை சுதாகரன் எம்.பி. குறிப்பிட வேண்டும் என்று, கேரள முதல்-மந்திரி அச்சுதானந்தன் வற்புறுத்தி இருக்கிறார்

0 கருத்துகள்: