பெண் குழந்தை பிறந்தால் உடனே விசம் கொடுத்து கொன்று விடுங்கள் என்று துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் மனைவி சல்மா அன்சாரி கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் மனைவி சல்மா அன்சாரி. இவர் அடிக்கடி மரபுகளை மீறி கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகி விட்டது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து கடந்த ஆண்டு தீவிரமாக விவாதம் எழுந்த போது, அந்த இட ஒதுக்கீடு எந்த பயனும் தராது என்று சல்மா அன்சாரி பேசினார். அரசு ஏராளமான திட்டங்களை கொண்டு வருகிறது. இதனால் எத்தனை பெண்கள் பயன் பெறுகிறார்கள். எனவே பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாத வரை இட ஒதுக்கீடு பயன் தராது என்றார். சல்மாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் சல்மா அன்சாரி புது சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார். பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமை பற்றிய ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க இயலாமல் சமுதாய சூழ்நிலை உள்ளது. இதில் எனது கருத்து என்னவென்றால் பெண் குழந்தை பிறந்ததும் உடனே விசம் கொடுத்து கொன்று விட வேண்டும் என்றார். இது கருத்தரங்குக்கு வந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. சல்மா அன்சாரியின் பேச்சு நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக