தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.2.11

பெங்களூர் நீதிமன்றத்தில் மதானியின் ஜாமீன் மனு தள்ளுபடி


பெங்களூர், பிப். 12- பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் அப்துல் நசீர் மதானியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பெங்களூரில் கடந்த 2008-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இது தொடர்பாக, கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் அப்துல் நசீர் மதானி கடந்த ஆண்டு ஆகஸ்டு 17-ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பெங்களூர் சிறையில்அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் அவரை ஜாமீனில் விடக்கோரி, பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வி. ஜெகன்நாதன் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். அப்போது அரசு வக்கீல் அசோக், "மதானி, அமைதியை குலைக்கும் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு உள்ளவராக இருக்கிறார். கேரளாவிலும் அவர் மீது வழக்குகள் உள்ளன. தேசத்தின் பாதுகாப்பை கருதி அவரை ஜாமீனில் விடக்கூடாது" என்று வாதிட்டார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு, மதானியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். என்றாலும் அவர் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து கொள்ள அனுமதி அளித்தார்

0 கருத்துகள்: