தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.3.11

கடாபியை பதவி விலக்க இராணுவ நடவடிக்கை நல்ல தெரிவாகாது! : ஒபாமா


கடாபியை பதவியிலிருந்து விலக்க, உலக நாடுகளே ஒன்றிணைய வேண்டும். எமது தன்னிச்சையான தாக்குதல்களின் மூலம் அவரை கட்டாயப்படுத்தி பதவி விலக வைக்க முடியுமெனில் அது ஒரு தவறாகிவிடும் என, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.
லிபிய தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கு மட்டுமே பங்கிருப்பதாக கருதுவதை நிரகாரித்து,  வாஷிங்கடனின் தேசிய பாதுகாப்பு
பல்கலைக்கழகத்திலிருந்து, நேரடியாக  மக்களுக்கு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது உரையில் அவர் தெரிவிக்கையில்

எமது இராணுவ நடவடிக்கையால், கடாபிக்கு எவ்வித உயிராபத்தும் ஏற்படாது என்பதை என்னால் உறுதிபட கூறமுடியும். எமது இராணுவ நடவடிக்கை மூலம் கட்டாயப்படுத்தி, கடாபியை பதவி விலக்குவது தவறானது.

அவர்களுடைய இராணுவ பலத்ததை தடுக்கவேண்டும். அவர்களுக்கு செல்லும் பணத்தை தடுக்கவேண்டும். எதிராக செயற்படுவோரிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். கடாபியை பதவி விலக கோரும், நாடுகளுடன் ஒன்றிணைய வேண்டும். இவற்றின் மூலம் அவர் பதவிலிருந்து தானாக விலகி ஜனநாயக மக்கள் ஆட்சிக்கு வழிவகுக்க வேண்டும்.

ஆனால் அது ஒரு நாள் இரவுக்குள் நடந்துவிட போவதில்லை. படிப்படியாகவே நடைபெறும் என கூறினார்.  மேலும் அமெரிக்க-இங்கிலாந்து  மற்றும் நேட்டோ படைகளின் கூட்டுத்தாக்குதலில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்திருந்தார்.

எனினும் ஒபாமாவின் இவ் உரை, அமெரிக்கா இப்போதும் உலக போலீஸ்காரராக செயற்படவில்லை என தன்னை காட்ட முனைந்து தோற்றுப்போயுள்ளதாக
அல்ஜசீரா செய்தி தளம் விமர்சித்துள்ளது.
பஹ்ரேன், யேமன் போன்ற நாடுகளிலும் மக்கள் புரட்சி தான் நடைபெறுகிறது. ஆனால் அதை பற்றி அமெரிக்கா ஒன்றும் அலட்டிக்கொள்வதாக தெரிவதில்லை. அமெரிக்க தலைமையில் இதுவரை நடத்தப்பட்டு வந்த கூட்டுப்படை தாக்குதல், நாளை புதன் கிழமை முதல் நேட்டோவின் தலைமைக்கு கைமாறும் என அவர் அறிவித்துள்ளார்.

ஆனால் இதுவரை தான் நடத்திய இராணுவ தாக்குதல்களின் செலவு எவ்வளவு? அதன் விளைவு என்ன? என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்? என்ற பல முக்கிய கேள்விகளுக்கு பதிலேதும் இல்லாமலே தனது உரையை முடித்துள்ளார். இந்த கேள்விகளுக்கு என்ன பதில் என்பது சிலவேளை அமேரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கூட தெரியாமிருக்கலாம்!  என அல்ஜசீரா கூறுகிறது.

0 கருத்துகள்: