புதுடெல்லி, பிப். 25- கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ரூ.200 கோடிக்கு அதிகமான பணம் பரிமாறியதற்கு ஸ்வான் டெலிகாம் நிர்வாகி சாகித் உஸ்மான் பல்வா உதவியுள்ளார் என்று டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைதாகி இப்போது நீதிமன்றக் காவலில் பல்வா உள்ளார். அவரது ஜாமீன் மனுவும், இவ்வழக்கில்
கைதாகியுள்ள ஆ.ராவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே.சந்தோலியாவின் ஜாமீன் மனுவும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிஐ தரப்பில் வாதாடப்பட்டது. அப்போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது:-இந்த வழக்கு மிகவும் முக்கியமானது. இவர்கள் இருவரையும் ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளையும், ஆதாரங்களையும் அழித்துவிடும் அபாயம் உள்ளது. கலைஞர் டிவி உரிமையாளர்களுக்கு ஆ.ராசா மிகவும் நெருக்கமானவர். கலைஞர் டி.வி.க்கு சினியுக் பிலிம்ஸ் தனியார் நிறுவனத்தில் இருந்து டிபி குரூப் நிறுவனம் மூலம் ரூ. 200 கோடிக்கும் அதிகமான பணம் சென்றுள்ளது. இந்த சினியுக் நிறுவனத்தில் பல்வாவின் உறவினர்கள்தான் பெரும்பாலான இயக்குநர்களாகவும், பங்குதாரர்களாகவும் உள்ளனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற பல்வா பல்வேறு முறைகேடான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு சிபிஐ வழக்கறிஞர் கூறினார்.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சய்னி, மனு மீதான உத்தரவை நாளைக்கு (இன்று) ஒத்தி வைத்தார். நன்றி:தமிழ்கூடல்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக