திரிபோலி எங்கள் நாட்டு மக்களை திசை திருப்பி அவர்களை குழப்பி கலவரத்தினை உண்டாக்கியதே அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் தான். இச்சதிச்செயலை அவர் திறமையாக கையாண்டுள்ளார் என லிபியா அதிபர் மும்மர் கடாபி தெரிவித்துள்ளார்.
லிபியாவில் 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபி பதவிவிலகக் கோரி கடந்த ஒருவாரமாக மக்கள் போராட்டம் நடத்தி
வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் திரிபோலியின் டி.வி. வாயிலாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அதில் கலவரத்தின் மூலக்காரணமான அல்- ஜவாயக் நகரில் தான் துவங்கியது. இப்பகுதியில் அல்கொய்தா ஆதரவாளர்களின் நடமாட்டம் உள்ளது. இவர்கள் தான் பொதுமக்களை எனது ஆட்சிக்கு எதிராக தூண்டிவிட்டுள்ளனர். இதற்கு அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் ஆசியுடன் நடந்துள்ளது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கடாபி கூறினார்.இந்நிலையில் நாட்டின் கிழக்கு பகுதியில், கடாபியின் செல்வாக்கு சரிந்தது. அந்த பகுதியை கைப்பற்றி விட்டதாகக் கூறி மக்கள் வீதிகளில் பட்டாசுகளை வெடித்து வெற்றி ஊர்வலம் நடத்துகிறார்கள். கிழக்கு பகுதியில் அதிபரின் செல்வாக்கு சரிந்தது. அங்கு மக்கள் வீதிகளில் கொடிகளை பிடித்துக் கொண்டு, பட்டாசுகளை வெடித்து, வெற்றி ஊர்வலம் நடத்தி வருகிறார்கள். அங்கு இருக்கும் ராணுவத்தினரும், கடாபியின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிய வருகிறது. கிழக்கு பகுதியில்தான், எகிப்தின் எல்லை இருக்கிறது. அந்த எல்லையை பாதுகாக்க ராணுவத்தினர் இல்லை. பாதுகாப்பு அற்ற நிலையில் எல்லைப்பகுதி இருப்பதாக அந்த பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர் நன்றி:தமிழ் கூடல்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக