தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.2.11

முஸ்லிம்கள் பிரஞ்சு கலாச்சாரத்துடன் கலந்துவிட வேண்டும் - சர்கோஸி

பாரிஸ்,பிப்.25:பிரான்சில் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் அவர்கள் பிரஞ்சு கலாச்சாரத்துடன் கலந்துவிட வேண்டும் என அந்நாட்டு அதிபர் சர்கோஸி தெரிவித்துள்ளார்.

பன்முக கலாச்சாரத்தை கண்டித்த அவர் ஒன்றுக்கு மேற்பட்ட கலாச்சாரங்கள் மூலமாக முன்னேறுவது என்பது தோல்வியை ஏற்படுத்தும் என விளக்கம் கொடுத்தார்.

பிரான்சு நாட்டைச்சார்ந்த ஒன் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரான்சில் வாழும் மக்களின் அடையாளத்தைக் குறித்து நாங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளோம். ஒரே சமுதாயமாக மாறுவதை

முஸ்லிம்கள் அங்கீகரிக்க வேண்டும். அது தேசிய சமுதாயமாகும் எனக் கூறிய சர்கோஸி பிரான்சில் மஸ்ஜிதுகளில் இமாம்கள் எவ்வாறு உரைநிகழ்த்த வேண்டுமென்ற குறிப்புகளையும் வழங்கியுள்ளார்.

மதரீதியான ஏகாதிபத்தியத்தை நோக்கி மேற்காசியா சென்றுக்கொண்டிருக்கிறது. பிராந்தியத்தில் ஜனநாயகத்திற்கு நிலைநாட்டுவதற்கான ஏற்பாடுகளை மத்திய கிழக்குநாடுகள் மேற்கொள்ளவேண்டும் என துனீஷியா, எகிப்து புரட்சிகளை மேற்கோள்காட்டி சர்கோஸி தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: