ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக டெல்லி போலீஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் பத்திரிக்கை ஒன்றில் முஸ்லீம்களுக்கு இந்தியாவில்ஓட்டுரிமையை பறிக்கவேண்டும் அவர்களுக்கு எந்தஒரு சலுகையும் கொடுக்ககூடாது என்று சங்பரிவரங்களின் விஷமப்பிரச்சாரத்தை கையிலெடுத்து சுப்ரமணியன் சுவாமி எழுதிய கட்டுரை ஒன்று தொடர்பாக, அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.இந்த புகாரின் அடிப்படையில் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
2ஜி ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து மத்திய அரசுக்கும், சிபிஐ-க்கும் சுவாமி பல்வேறு குடைச்சல்களை கொடுத்து கொண்டிருப்பதால் காங்கிரஸ் தலைமை அவர் மீது ஏக கடுப்பில் உள்ளது.
இதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை இவ்வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன் 2ஜி வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மேற்கொண்டு அவர் குடைச்சல் கொடுப்பதை தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக