தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.10.11

நவம்பர் 1-லிருந்து ஆந்திராவில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி!

ஹைதராபாத், அக். 4-  ஆந்திராவில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது. இதற்கான திட்டம் நவம்பர் முதல் தேதி முதல் அமுலுக்கு வர உள்ளது.
மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி இதற்கான கோப்பில் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி கையெழுத்திட்டார். இது குறித்து ஆந்திர மாநில அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை மாநில அரசு அமுல்படுத்த முடிவெடுத்துள்ளது.
மாநிலம் உருவான நாளான நவம்பர் 1-ந் தேதி முதல் இந்த திட்டம் அமுலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 7.50 கோடி ஏழைகள் பயன்பெறுவர். தற்போது 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. 
இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி செலவாகிறது. புதிய திட்டத்துக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.600 கோடி செலவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: