தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.10.11

துபாயில் கோலாகலமாக தொடங்கிய 2ம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு


துபாயில் இரணடாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அக்டோபர் 1ம் தேதியானது தொடங்கியது. 4 ஆம் தேதி வரை இது நடைபெறுகிறது. மாநாட்டை மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தமிழர்கள் வணிகத்தில் ஒன்றுபட வேண்டும்-டத்தோ சாமிவேலு
02.10.2011 ஞாயிற்றுக்கிழமை காலை துவக்க விழா நடைபெற்றது. மலேசிய அரசின் தெற்காசியாவுக்கான சிறப்புத் தூதர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு தலைமை
தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் உலகெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் வணிகத்துறையில் ஒன்றுபட்டு பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்றார். மேலும் அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்தியர்களில் 30 இந்திய தொழிலதிபர்கள் பெரும் பணக்காரர்களாக இருந்து வருவது பெருமையளிக்கிறது என்றார்.
மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவர் வி.ஆர்.எஸ். சம்பத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வாழ்த்துரை வழங்கிய ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையத் எம் ஸலாஹுத்தீன் அவர்கள் தனது உரையில் தமிழ் மூதாட்டி ஒளவையார் பாடியதொற்கொப்பா திரைகடலோடியும் திரவியம் தேடு எனக் குறிப்பிட்டதிற்கிணங்க நாங்கள் இங்கு வந்து வணிகம் புரிகிறோம். மேலும் திருக்குர்ஆன் வசனங்களை மேற்கோள்காட்டியும் வணிகம் குறித்த தகவலை விவரித்தார்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தனது வாழ்த்துரையில் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் அமீரகத்தில் வணிகம் புரிவதற்கு பெரிதும் ஒத்துழைப்பு அளித்து வரும் அமீரக ஆட்சியாளர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
மாநாடு சிறப்புற பெரிதும் ஒத்துழைப்பினை நல்கி வரும் அமீரகத் தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன் காக்காவைப் பாராட்டினார்.
அமீரகத்துக்கான இந்தியத்தூதர் எம்.கே. லோகேஷ், இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, நீதியரசர் ஏ. ஆர். இலட்சுமணன், மலேசிய துணைத்தூதர் அகமது படில் சம்சுதீன், கத்தார் தோஹா வங்கி தலைமை நிருவாக அதிகாரி ஆர். சீத்தாராமன், இந்தியா கிளப் தலைவர் சித்தார்த் பாலச்சந்திரன், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரி, ராஜ்யசபா உறுப்பினர் ஜின்னா, தொழிலதிபர் வீரமணி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

0 கருத்துகள்: