ஸன்ஆ: 32 ஆண்டுகளாக ஆட்சியில் தொடரும் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி ஸன்ஆவில் எதிர்ப்பாளர்கள் பத்து லட்சம்பேர் திரண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
ஸன்ஆவை தவிர கிராமங்களிலும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மக்கள் வீதியில் இறங்கினர். தலைநகரின் பெரும்பாலான மஸ்ஜிதுகளை பூட்டிவிட்டு இமாம்களும், பொதுமக்களும் ஸன்ஆ பல்கலைக்கழக மைதானத்தில் ஜும்ஆ தொழுகையை
நடத்தினர். பின்னர் பேரணி துவங்கியது.ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் போராட்டத்தில் முதன்முறையாக இத்தகையதொரு நிகழ்வு நடந்தேறியுள்ளது.நகரம் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடியது. வீதிகள் நிறைந்து வழிந்தன. ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் புகைப்படங்கள் எதிர்ப்பாளர்களின் கூடாரங்களில் தொங்கவிடப்பட்டிருந்தன.
இதற்கிடையே உள்ளூர் பத்திரிகையாளர்களை போலீஸார் கைது செய்துள்ளதாக ஜெர்னலிஸ்ட் யூனியன் உறுப்பினர் ஜமால் அனாம் தெரிவித்தார்.
ஏடன்,தாஸ்,ஹழரல் மெளத் ஆகிய இடங்களிலும் அதிபருக்கு எதிராக பிரம்மாண்ட பேரணிகள் நடந்தன. எதிர்ப்பாளர்கள் ஸன்ஆவிற்குள் நுழைவதை தடுக்க அதிபரின் ஆதரவாளர்கள் தனியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
ஸாலிஹின் அரசு ஏற்கனவே வீழ்ச்சியடைந்து விட்டதாகவும்,அமைதியான போராட்டம்தான் நம்முடையது எனவும் பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் தாஹா அல் முத்தவக்கில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக