குவைத் சிட்டி:ஈரானில் குவைத் தூதரை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது. இந்நடவடிக்கை ஈரான் அரசிற்கு தெரிந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குவைத்தில் உளவு வேலைப்பார்த்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேவேளையில், உளவு வேலைத் தொடர்பாக குவைத்தில் ஈரான் தூதரகத்தில் ஷெர்ஷே தஃபேயை குவைத் அரசு அழைத்து கண்டனத்தை தெரிவித்துள்ளது.
உளவு வேலை காரணமாக ஈரானின் தூதரை குவைத்திலிருந்து வெளியேற்றவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குவைத் ராணுவம் மற்றும் குவைத்தில் அமெரிக்க ராணுவம் ஆகியவற்றின் முக்கிய மையங்களைக் குறித்தும் இதர விபரங்களையும் ஈரான் உளவு வேலை வாயிலாக கசியச்செய்ததாக குற்றஞ்சாட்டி தூதரை திரும்ப அழைத்துள்ளது குவைத்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு ஈரானியர்களையும், ஒரு குவைத் குடிமகனையும் நீதிமன்றம் அண்மையில் மரணத்தண்டனை விதித்திருந்தது. இதில் ஒரு ஈரானியின் மகளை நீதிமன்றம் விடுதலைச் செய்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட சிரியாவைச் சார்ந்த நபரையும், எந்த நாட்டிலும் குடியுரிமை இல்லாத அரபு வம்சாவழியைச் சார்ந்த ஒருவரையும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மரணத்தண்டனை விதிக்கப்பட்ட 3 நபர்களும் குவைத் ராணுவத்தில் சேவை புரியும் வேளையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக