தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.2.11

இந்தியாவில் 34 நிமிடத்துக்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள்


இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்தில் 2 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பெங்களூரில் செயின்ட் ஜோசப் காலேஜ் ஆப் காமர்ஸ் மற்றும் ஸ்ரீ ஜக்ருதி சமிதி என்ற பெண்கள் அமைப்பு சார்பில் பெண்களுக்கு எதிரான கொடுமை: தீர்க்க வழிகள் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், மனித உரிமை கல்வி மற்றும் கண்காணிப்பு அமைப்பின் தென்னிந்திய பிரிவு, பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் குறித்து ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் அதிகம் என இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரியாக 26 நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுகிறாள். இதுபோல் 34 நிமிடத்துக்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள். ஆண்டுக்கு 1.5 கோடி பெண் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்களில் 4ல் ஒருவர் 15 வயதைத் தாண்டுவதற்கு முன்பே இறந்து விடுவதாகவும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பெரும்பாலான கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும், குழந்தை பிறப்பதற்கு முன்பே ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிவதற்கான அல்ட்ராசவுண்ட் இயந்திரம் மட்டும் இருக்கின்றன. இதை வைத்து, பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்து விடுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் சட்டதிட்டங்கள் அனைத்தும் ஆண்களாலேயே இயற்றப்படுவதால் ஆண்களுக்கு சாதகமாகவும், பெண்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளனதுது என கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நக்மோகன் தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை மட்டுமல்லாது, பாலியல் வேறுபாடு, அதிகார பகிர்வில் ஏற்றத்தாழ்வு என பெண்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம். இதிலிருந்து விடுபட ஆண்களின் உதவி தேவைதுது என ஸ்ரீ ஜக்ருதி சமிதி செயலாளர் கீதா மேனன் தெரிவித்துள்ளார். செய்திகள்:அலைகள்
:

0 கருத்துகள்: