தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.5.11

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை: சென்னையில் கருத்தரங்கம்


இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் சிறிலங்க அரச படைகள் போர்க் குற்றங்களை இழைத்துள்ளன என்றும், அதன் மீது ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ள ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மீது சென்னையில் இன்று கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
‘தமிழீழ விடுதலையும்
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையும்’ என்ற தலைப்பில், சென்னை, தியாகராயர் நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள செ.தெ.நாயகம் பள்ளியில் இன்று மாலை 5 மணி முதல் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கில் ஐ.நா.அறிக்கையும் ஊடகங்களும் என்று தலைப்பில் மூத்த இதழாளர் டி.எஸ்.எஸ்.மணியும், ஐ.நா.அறிக்கையின் சாராம்சங்கள் – சாதகமும், பாதகமும் என்று தலைப்பில் இதழாளர் பிரியா தம்பி, மனித உரிமைப் போராளிகள் பாண்டிமாதேவி, அருள் எழிலன் ஆகியோரும், ஐ.நா.அறிக்கையும், இந்தியாவும் என்று தலைப்பில் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் எம்.ஜி.தேவசகாயம், எழுத்தாளர் இராசேந்திர சோழன் ஆகியோரும், ஐ.நா.அறிக்கையும், மனித உரிமைப் போரும் என்ற தலைப்பில் பேராசிரியர் பால் நியூமெனும், சர்வதேச அரசியல் சதியில் சிக்கும் தமிழீழ விடுதலை என்ற தலைப்பில் இதழாளர் கா.அய்யநாதன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரும் பேசுகின்றனர்.
மே 17 இயக்கம் இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்துகிறது

0 கருத்துகள்: