தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.5.11

எகிப்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குகிறது சவுதி அரேபியா


கெய்ரோ, மே.22- எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதை தொடர்ந்து 17 நாட்களுக்கு பிறகு முபாரக் பதவி விலகினார். தற்போது எகிப்தின் ஆட்சி அதிகாரம் ராணுவ கவுன்சில் வசம் உள்ளது. 
 
இந்நிலையில் போராட்டத்தை தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட எகிப்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த சவுதி அரேபியா முன்வந்துள்ளது. எகிப்துக்கு அந்நாடு ரூ.20 ஆயிரம் கோடி நிதிஉதவி அளிக்கிறது. 

 இதில் மானியமும், கடனுதவியும் அடங்கும். இத்தகவலை எகிப்தின் ராணுவ கவுன்சில் தலைவர் உசேன் தத்தாவி தெரிவித்துள்ளார். இதே போன்று எகிப்துக்கு அமெரிக்காவும் ரூ.9 கோடி கடனுதவி அளிக்கிறது என்று அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்: