எகிப்தின் அதிபர் பதவியிலிருந்து பதவிவிலக்கப்பட்ட ஹோஸ்னி முபாரக் மற்றும் அவருடையஇரு மகன்களையும் 15 நாள் தடுப்புக்காவலில் வைத்து, இலஞ்ச ஊழல் தொடரான விசாரணை நடத்தப்படவுள்ளதாக இராணுவ அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பில், குற்றப்பிரிவினர் பேஸ்புக் இணையத்தளத்தில் நேற்று (புதன் கிழமை) அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில், குற்றப்பிரிவினர் பேஸ்புக் இணையத்தளத்தில் நேற்று (புதன் கிழமை) அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவருடைய புதல்வர்கள் காமல், ஆலா ஆகிய இருவரையும் எதிர்வரும் 15ம் நாட்களுக்கு, குற்றப்பிரிவினர் விசாரணை நடத்துவர் எனவும், குற்றப்பிரிவின் ஜெனரலும் இதில் கலந்துகொள்கிறார் எனவும் இவ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தியமை, பாரிய லஞ்ச ஊழல் மோசடி செய்தமை என்பது தொடர்பில் இவ்விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், முபாரக்கின் இரு மகன்களான காமல், மற்றும் ஆலா ஆகியோர்கள், போலீஸ் வானில் வந்த காவற்துறை அதிகாரிகளினால் திடீர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அங்கியிருந்த 2000 ற்கு மேற்பட்ட அவர்களுடைய ஆதரவாளர்கள், போலீஸ் வாகனத்தின் மீது தண்ணீர் போத்தல்கள், கற்கள் என்பவற்றை வீசி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். உங்கள் மீதான எந்தவொரு விசாரணையும் 15 நாட்களுக்கு தான் என மேஜர் ஜெனரல் மொஹ்மட் எல் கதிப், முபாரக்கின் புதல்வர்களிடம் கூறி அவர்களை அழைத்து சென்றார்.
இதேவேளை விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் முபாரக்கிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எகிப்திய புரட்சியை ஒடுக்குவதற்காக, முபாரக்கின் கட்டளைக்கு ஏற்ப, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்களில் சுமார் 800 க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யபப்ட்டது தொடர்பில் அவர் மீதான விசாரணைகள் தொடர்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக