தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.2.11

வன்முறையை நிறுத்துமாறு லிபிய அதிபருக்கு ஐ.நா. கோரிக்கை


நியூயார்க், பிப். 23- அமைதி வழியில் போராடிவரும் லிபிய மக்களின் மீது இராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு லிபியா அதிபர் கர்னல் கடாபியை ஐ.நா. பாதுகாப்புப் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
ஐ.நா.வின் உயர் அதிகார அமைப்பான பாதுகாப்புப் பேரவை அதன் இம்மாத தலைவரான பிரேசில் தூதர் மரியா லூயிசா ரிபேரோ வயோட்டி தலைமையில்
கூடியது. இக்கூட்டத்தில் லிபிய அரசிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்திவரும் அமைதி வழிப் போராட்டத்தில் அரசு வன்முறையை ஏவிவிட்டுள்ளதற்கு கவலை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக்கூட்டதிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புப் பேரவைத் தலைவர் வயோட்டி, அமைதி வழியில் போராட்டம் நடத்திவரும் மக்கள் மீது ஆயுதப் படைகளை ஏவி விடப்பட்டு, வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம். அரசு வன்முறையில் கொல்லப்பட்ட 300க்கும் அதிகமான மக்களுக்கு பேரவை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது. வன்முறையை உடனடியாக கைவிட்டு, மக்கள் பிரதிநிதிகளுடன் பேச வேண்டும் என்று பேரவை கேட்டுக்கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அமைதி வழியில் போராடும் மக்கள் மீது ஹெலிகாப்டர், போர் விமானங்களை பயன்படுத்தி குண்டு வீசிக் கொன்றிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான்கி மூன், வன்முறையை நிறுத்துமாறு அதிபர் கடாபியை தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவருடைய பேச்சாளர் கூறியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையும் அரசு வன்முறையை கண்டித்துள்ளார்

0 கருத்துகள்: