தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.2.11

சூயஸ் கால்வாய்:ஈரான் தனது பலத்தை காட்டுவதாக இஸ்ரேல்

ஜெருசலம்,பிப்.23தனது சக்தியை வெளிப்படுத்துவதன் ஒரு பகுதியாகத்தான் ஈரானின் போர்க் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து சென்றது என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார்.

ஈரானின் இரு போர் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து மத்தியத்தரைக் கடல் வழியாக சிரியா சென்றது. ஈரானின் போர் கப்பல்கள் 1979 ஆம் ஆண்டு ஈரானின்

இஸ்லாமியப் புரட்சிக்கு பிறகு குறைந்த காலம் கடந்து செல்ல எகிப்து அனுமதியளித்துள்ளதாக ஈரானின் தூதரக பிரதிநிதியொருவர் தெரிவிக்கிறார்.

இதனைக் குறித்து தனது கேபினட் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, ஈரான் தனது சக்தியை வெளிப்படுத்துவதன் ஒரு பகுதியாகத்தான் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து சென்றது என கவலை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்தர் லிபர்மன், ஈரானின் இச்செயல் கோபத்தை தூண்டுவதாகும் என தெரிவித்துள்ளார். எகிப்தில் சமீபத்தில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் வெளியேற்றப்பட்டதில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் பெரும் பங்கு வகித்தது. இவ்வியக்கம் ஈரானுடன் நெருக்கமானது. எனவே இது நிகழ்ந்திருக்கலாம் என இஸ்ரேலிய அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: