தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.2.11

பக்ரைனில் அரசியல் கைதிகளை விடுவிக்க மன்னர் சம்மதம்


மனாமா பக்ரைனில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட டியா பிரிவு கைதிகளை விடுவிக்கும்படி மன்னர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கடந்தாண்டு 25 பேர் மீது போடப்பட்ட வழக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை துவங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது

பக்ரைனில் மன்னர் ஹமீத்பின்துசா அல் கலிபாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். சன்னி பிரிவை சேர்ந்த இவர் ஷியா பிரிவினரை இரண்டாம் தர குடிமகன்களாக நடத்துவதாக புகார் கூறினர். கடந்த 14-ந் தேதி போராட்டம் தொடங்கியது. கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் ஓரிருநாளில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், ஏற்கனவே மன்னருக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட ஷியாபிரிவு அரசியல் கைதிகளை விடுவிப்பதாக போராட்டத்தின்போது உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி சிலர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 25-க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்படவில்லை. அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இது குறித்து எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஷியா பிரிவினர் நேற்று மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். பனாமா நகரில் உள்ள ஷாப்பிங் சென்டரில் திரண்டனர். அங்கிருந்து புறப்பட்டு பியர்ஸ் சதுக்கத்துக்கு வந்தனர். அங்கு சுமார் 1 லட்சம் பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடி மற்றும் பேனர்களை ஏந்தியிருந்தனர். மன்னர் ஹமீத்துக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். ஆட்சியை விட்டு மன்னர் விலக வேண்டும் என வலியுறுத்தினர். 
 
இதற்கிடையே அரசியல் கைதிகள் அனைவரையும் விரைவில் விடுவிக்க மன்னர் ஹமீத் சம்மதம் தெரிவித்தார். எனவே போராட்டத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

0 கருத்துகள்: