துபாய், செப். 14- சார்ஜாவில் மிஸ்ரி நசீர்கான் என்ற பாகிஸ்தானியர் ஒருவரை இந்தியர்கள் 17 பேர் சேர்ந்து கொலை செய்து விட்டனர். அவர்களுக்கு சார்ஜா கோர்ட்டு, கடந்த ஆண்டு மரண தண்டனை விதித்தது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.4.36 கோடி கொடுப்பதாக, குற்றவாளிகள் தரப்பில் கோர்ட்டில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொள்வதாக மிஸ்ரி நசீர்கானின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அதன்படி நேற்று கோர்ட்டில் ரூ.4.36 கோடி பணம், பாதிக்கப்பட்டவரின்
குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.என்றாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டணை விதிப்பதாக அறிவித்தார். இந்த தண்டனை காலத்தை அவர்கள் ஏற்கனவே ஜெயிலில் அனுபவித்து விட்டனர். எனவே 17 இந்தியர்களும் விடுதலை செய்யப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள். ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும், 17 இந்தியர்களை இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்க அங்குள்ள இந்திய தூதர் ஏற்பாடு செய்து வருகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக