ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், நேட்டோ படையின் தலைமை
அலுவலகம் மற்றும், அமெரிக்க தூதரகத்தினை குறிவைத்து தலிபான்கள், தற்கொலை குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு என்பவற்றில், 77 அமெரிக்க இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 5 ஆப்கானிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
இன்று பகல் ஒரு மணியளவில் தொடங்கிய இத்தாக்குதலின் போது காபுலின் முக்கிய கட்டிடங்களில் திவீரவாதிகள் ஊடுறுவியுள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பின் 10 வது ஆண்டு நினவு தினத்தை முன்னிட்டு, தலிபான்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அமெரிக்க தரப்பில் கூறப்பட்டு வரும் போதும், செப்.11 தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை. அதை காரணமாக காட்டி அமெரிக்கா எம்மீது தாக்குதல்களை தொடர்ந்துவருகிறது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக