தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.6.11

67 அமெரிக்க உளவுத்துறையினருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது

இஸ்லாமாபாத், ஜூன். 25-  67 அமெரிக்க உளவுத்துறையினருக்கு பாகிஸ்தான் நிபந்தனையுடன் விசா வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் 67 அமெரிக்க உளவுத்துறையினருக்கு விசா வழங்கி உள்ளது. பாகிஸ்தானில் உளவுவேலை பார்ப்பதற்காக வருபவர்கள் பற்றிய முழு விவரங்களையும் அமெரிக்கா பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டால் மட்டுமே, அவர்களுக்கு விசா வழங்க முடியும்
என்று பாகிஸ்தான் நிபந்தனை விதித்து உள்ளது. இந்த நிபந்தனைக்கு அமெரிக்கா சம்மதித்து உள்ளது. இதை தொடர்ந்து தான் 67 அமெரிக்கர்களுக்கு விசா வழங்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க உளவுதுறையின் ஏஜெண்டு 2 பாகிஸ்தானியர்களை சுட்டுக்கொன்றதை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டது. அடுத்து கடந்த மே மாதம் 2-ந்தேதி பின்லேடனை அமெரிக்க ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து சுட்டுக்கொன்றது. இதுவும் பாகிஸ்தானை ஆத்திரம் அடைய வைத்தது. இதன் காரணமாக தான் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் நிபந்தனை விதித்தது.

0 கருத்துகள்: