தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.10.11

பலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வுகாண அதி உயர்மட்ட பேச்சுக்கள் ஆரம்பம்


பாலஸ்தீன பிரச்சனை தீர்வை எட்டும் இறுதிக்கட்டத்தில் நுழைந்துள்ளது. உலகத்தின் முக்கிய வல்லரசுகளான அமெரிக்கா, ரஸ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா சபை ஆகியன இணைந்து அதி உயர்மட்ட பேச்சுக்களை இன்று ஆரம்பித்துவிட்டன. முதல் கட்டமாக வரும் 23 ம் திகதி உத்தேச தீர்வின் மாதிரி அறிக்கை வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து 26ம் திகதி புதிய சுற்று பேச்சுக்கள் ஆரம்பிக்கும். இதில் எருசெலேமை பிரிப்பது தொடர்பான பேச்சுக்களே தற்போது முனைப்படைந்துள்ளன. எருசெலேமின் ஒரு பகுதியாவது தலைநகரமாக கிடைக்க வேண்டும், அதை பாலஸ்தீன தனியரசின் தலைநகராக்க வேண்டும் என்ற பாலஸ்தீனரின் நியாயமான கோரிக்கை விவாதத்திற்கு வருகிறது. இரு தரப்பும் இந்த உத்தேச முடிவை ஏற்கும்பட்சத்தில் பாலஸ்தீன பிரச்சனை முடிவுக்கு வந்து, ஐ.நாவில் தனிநாட்டு அங்கீகாரத்தையும் பாலஸ்தீனம் பெற்றுவிடும். தற்போதுள்ள பேச்சுக்களை குழப்பியடிக்காது ஹமாஸ் அமைப்பும், இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பென்ஞமின் நெட்டன் யாகுவும் ஒழுங்காக நடந்து வருகிறார்கள். பாலஸ்தீனருக்கு தீர்வு வந்தால் இஸ்ரேலிய கடும்போக்கு வாதிகள் துப்பாக்கியை தூக்கும் அவலமும் ஏற்படும் என்பதால் நெட்டன்யாகு மிக அவதானமாக காய்களை நகர்த்துகிறார். இந்த நிகழ்வு சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க மறுத்துவரும் சிங்கள அரசின் வயிற்றில் கொறக்கா புளியை கரைத்திருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. பாலஸ்தீன விடிவு, ஈழத் தமிழரின் விடிவுக்கு புதிய வடிகாலாக அமையும். வடக்கே காணிப்பதிவு, புத்தவிகாரை போன்ற சிங்கள இனவாத செயல்கள் குப்பையில் போகும் நிலையையும் ஏற்படுத்தும். திருமலை தமிழரின் தலைநகராக முடிசூட வேண்டும் என்ற தமிழர் கனவின் நியாயத்தை உலகம் ஒப்புக்கொள்ளும் நாள் நெருங்குவதை பாலஸ்தீன தீர்வு காட்டுகிறது. தமிழர் கூட்டமைப்பினர் மிக உறுதியாக பாலஸ்தீனத்தை அவதானிக்க வேண்டிய பருவம் இதுவாகும்.

0 கருத்துகள்: