தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.10.11

மூட நம்பிக்கை முட்டாள்களிடம் காசு பார்க்கும் சாமியார்கள் !!


கல்வி அறிவில் பின் தங்கிய தர்மபுரி மாவட்ட மக்களின் அறியாமையை பயன்படுத்தி பல கிராமங்களில் கோவில் பூசாரிகள், அருள் வாக்கு சொல்லுவதும், பேய் ஓட்டுதல், சூனியம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு மாந்திரீக முறைகளை பயன்படுத்தி ஏழை மக்களிடம் பூஜை என்ற பெயரில் பணம் கறப்பதும் இங்கு அதிகம் நடந்து வருகிறது.

மூட நம்பிக்கையில் ஊறி போன மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் பல்வேறு மூட நம்பிக்கையை கையில் எடுத்து கொண்டு மருத்துவ சிகிச்சை எடுக்காமல் அவதிப்படும் சம்பவங்களும் அதிகம் நடக்கிறது. கிராம பகுதிகளில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால், மருத்துவமனைக்கு செல்வதை விட கிராம பகுதிகளில் உள்ள பூசாரிகளை நாடி செல்வதோடு, அவர்கள் கூறும் பரிகார பூஜை நடத்துவதும் அதிகம் நடக்கிறது.

உடல் நலம் பாதிக்கப்படுவோரை பூசாரிகளிடம் அழைத்து செல்லும் போது, பூசாரிகள் பூஜை செய்து விதி வழங்குவதோடு, கிராம மற்றும் நகரப்பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் செல்லும் போது பயந்து விட்டதாகவும், கறுப்பு அடித்து விட்டதாகவும் கூறி பரிகார பூஜைகள் செய்ய சொல்கின்றனர். 

பரிகார பூஜையே வித்தியாசமாக இருக்கிறது. பரிகார பூஜைக்கு கோழி, பப்பாளி பழம், வெள்ளை பூசனி உள்ளிட்டவைகளை வாங்கி வந்து அதை உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களில் தலையை சுற்றி பயந்ததாக கூறப்படும் எடுத்துக்கு உச்சி நேரத்தில் (பகல் 12 மணிக்கு) சென்று அந்த பகுதியில் சிறு, சிறு கற்களை வைத்து வீடு போல் கட்டி அதில் பெரிய கல்லுக்கு சந்தனம், குங்குமம் வைத்து ஊதுபத்தி, கற்பூரம் காட்டி, அந்த இடத்தில் கோழியை பலியிட்டு, அதன் ரத்தத்தை ஊற்றி விட்டு பப்பாளி மற்றும் வெள்ளை பூசணியை உடைத்து கல்லால் கட்டிய வீட்டின் நான்கு முளையிலும் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுவார்கள்.

இந்த பரிகார பூஜைக்கு, "பொட்டு வைத்தல்' என, பெயரிட்டுள்ளனர். இது போன்று செய்த பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டவர் குணம் அடைவதாக கிராம மக்கள் மத்தியில் அபார நம்பிக்கை உள்ளது. அதே போல் பல இடங்களில் அருள் வாக்கு என்ற பெயரில் குறி கேட்பவர்களின் வீடுகளில் இறந்தவர்கள் பெயரில் குறி சொல்வது உண்டு.இது போன்ற மூட நம்பிக்கையின் காரணமாக பல நேரங்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நலம் தேறாமல் மிக மோசமான நிலைக்கு வந்த பின் மருத்துவமனைக்கு அழைத்து வரும் கொடுமைகள் அதிகம் நடந்து வருகிறது. 

மூட நம்பிக்கை ஒரு பக்கம் இருப்பதை போல் கிராம பகுதியில் போலி டாக்டர்களுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதும் அடகம் உள்ளது.கல்வி அறிவில் தெளிவு பிறக்கும் வரையில், தர்மபுரி மாவட்டத்தில் இது போன்ற கொடுமைகளை தடுக்க முடியாது என்பதால் தான் மாவட்ட நிர்வாகம் கல்வியறிவுக்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த காலங்களை ஒப்பிடும் போது மூட பழக்க, வழக்கம் குறைந்திருந்த போதும், மக்கள் முன்னேற்றத்துக்கு அடியோடு மூட நம்பிக்கை ஒழிய வேண்டும்., நம் அனைவரின் எதிர்பார்ப்பு.நடக்குமா?

0 கருத்துகள்: