தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.10.11

அறக்கட்டளை நிதி முறைகேடு-ஹஸாரேவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்


Anna_Hazare_Pra7418டெல்லி: அன்னா ஹஸாரேவுக்குச் சொந்தமான ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையில்  நடந்த நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் விளக்கம் அளிக்குமாறு அன்னா ஹஸாரேவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹஸாரே தவிர மகாராஷ்டிர அரசு மற்றும் சிபிஐக்கும் விளக்கம்
அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் என்.எல்.சர்மா என்பவர் பொது நலன் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதில், 1995ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை அன்னாவின் அறக்கட்டளை கணக்கு வழக்குகளை முறையாக பராமரிக்கப்படவில்லை.  மேலும் மத்திய அரசும், மாநில அரசும் கொடுத்த ஏராளமான நிதி குறித்த கணக்கு வழக்கும் முறையாக இல்லை. எனவே இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சர்மா கோரியிருந்தார்.
ஏற்கனவே இந்த நிதி முறைகேடு தொடர்பாக பி.எஸ்.சாவந்த் கமிஷன் விசாரணை நடத்தியுள்ளது என்பது நினைவிருக்கலாம். அறக்கட்டளை பணத்தை எடுத்து ஹஸாரேவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டதாகவும், இதுவும் ஒரு வகையில் முறைகேடே என்று சாவந்த் கமிஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: