தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.10.11

'Final Destination : போலியும், நிஜமும் (வீடியோ)


நேற்று லாஸ் வேகாஸில் நடைபெற்ற ரேஸிங் கார் ஓட்டப்பந்தயத்தில் 15
ஓட்டப்பந்தய கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில், இரு தடவை 'இண்டியானாபோலீஸ் 500' சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்தின் டான் வெல்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரபல Indycar நிறுவனம் நடத்திய
இந்த ஓட்டப்பந்தயத்திற்கு தகுதியற்ற, அனுபவற்ற, பொறுமையற்ற பல ஓட்டப்பந்த வீரர்கள் கலந்துகொள்ள ஆசைப்பட்டது, மைதானம் தயார் படுத்தப்படாதது, முறையற்ற பாதுகாப்பு தடுப்புக்கள் இல்லாதது என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இந்த விபத்தின் பின்னணியில் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த 2009 இல், ஹாலிவூட்டில் வெளிவந்து வசூலை அள்ளி குவித்த Final Destination 4 திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகள் இதே போன்று ஒரு விபத்தை மையமாக வைத்தே வடிவமைக்கப்பட்டிருக்கும் (லின்க்).

ஆனால் அதே போன்று இப்போது நிஜத்தில் நடந்திருப்பது வேதனையான விடயம்.

 கோடிகோடியாக பணம் வாரி இரைக்கப்படும் இது போன்ற ரேஸிங் கார் போட்டிகளில் பங்கு பெற்றும் வீரர்களுக்கு சுற்றியிருக்கும் ஆபத்தையும், பார்வையாளர்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதையும் இவ்விரு வீடியோக்களும் நன்றாகவே எடுத்துரைக்கிறது.

பைனல் டெஸ்டினேஷன் நிஜத்தில் - லாஸ் வேகாஸில் கோர விபத்து - புகைப்படம்

0 கருத்துகள்: