தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.10.11

கடாபியின் மகன் கமிஸ் மரணத்தை டி.வி. சேனல் உறுதி செய்துள்ளது


லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் இளைய மகன் கமிஸ். 28 வயதான இவர் கடாபிக்கு விசுவாசமான ஒரு படைப்பிரிவுக்கு தலைமை தாங்கி யுத்த களத்தில் நின்றார். புரட்சிப்படையுடன் அவரது படை டர்குணா என்ற இடத்தில் மோதியது. இந்த சண்டையில் கமிஸ் கொல்லப்பட்டார். இது நடந்தது. கடந்த மாதம் 29-ந் தேதி ஆகும். இந்த யுத்தத்தில் அவருடன் போர்க்களத்தில் இருந்த அவருடைய உறவினர் மகன் முகமதும் பலியானார்.
இவர் லிபியாவை கடாபி ஆட்சி செய்த போது உளவுத்துறை தலைவராக இருந்த அப்துல்லா அல் செனூசியின் மகன் ஆவார். கமிஸ்
கடாபியின் மரணத்தை கடாபி ஆதரவு டி.வி. சேனல் அர்ராய் உறுதி செய்து உள்ளது. இந்த சேனல் சிரியாவில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. கமிஸ் உடல் உடனடியாக டர்குணா நகரில் அடக்கம் செய்யப்பட்டது.

0 கருத்துகள்: