தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.10.11

அமெரிக்கா வரம்பு மீறக் கூடாது: பாகிஸ்தான் ராணுவ மந்திரி எச்சரிக்கை


அமெரிக்கா சமீப காலமாக பாகிஸ்தான் மீதான ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் கடந்த 3 நாட்களில் 10 பேர் பலியானார்கள். அமெரிக்கா இப்படி தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது எங்கள் பொறுமையை சோதிக்கிறது என்றும் அமெரிக்கா வரம்பு மீறி நடந்து கொள்ளக்கூடாது என்றும் பாகிஸ்தான்
ராணுவ மந்திரி அகமது முக்தார் எச்சரித்து இருக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தூதரகம் மீது தாக்குதல் நடத்திய ஹக்கானி தீவிரவாதிகள் பாகிஸ்தானில் தளம் அமைத்து அங்கேயே பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் செவிசாய்க்காததுடன் ஹக்கானி தீவிரவாதிகள் மீது நடவடிக்கை இல்லை என்றும் கூறி விட்டது.
இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா சமீப காலத்தில் தொடர்ந்து 3 நாட்களாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த 3 எகிப்தியர்கள் உள்ளிட்ட 10 பேர் பலியானார்கள்.
2004-ம் ஆண்டு ஜூன் மாதம் தான் முதன் முதலாக ஏவுகணை தாக்குதல் தொடங்கியது. அது முதல் இப்போது வரை 300 முறை பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 173 சிறுவர்கள் உள்ளிட்ட 775 அப்பாவிகள் பலியானார்கள். இந்த புள்ளி விவரங்களை லண்டனில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த தாக்குதல்களில் 1225 பேர் காயம் அடைந்தனர்.
இப்படி தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் எரிச்சல் அடைந்த பாகிஸ்தான் அமெரிக்காவை எச்சரித்து உள்ளது. பாகிஸ்தான் ராணுவ மந்திரி சவுத்ரி அகமது முக்தார் அமெரிக்காவை எச்சரித்து இருக்கிறார். இந்த தாக்குதல்களை உடனடியாக கைவிடவேண்டும்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமெரிக்கா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால், பாகிஸ்தான் பொறுமை இழந்து வருகிறது. இந்த தாக்குதல் எதிர் விளைவுகளை தான் ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக கடுமையான நிலையை எடுக்கும் வகையில் கொள்கை அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட இருக்கிறது. இவ்வாறு ராணுவ மந்திரி கூறினார்.
ஆப்கானிஸ்தானின் தெற்கு எல்லையோரத்தில் அமெரிக்கா ராணுவத்தை குவித்து உள்ளது. இந்த தெற்கு எல்லையோரம் என்பது பாகிஸ்தானின் வசீரிஸ்தானின் அருகில் உள்ள பகுதி ஆகும். இந்த வசிரிஸ்தானில் தான் தலீபான், அல்கொய்தா தீவிரவாதிகள் செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள். பீரங்கிகள், ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன ராணுவ தளவாடங்கள் ஆகியவை ஆப்கானிஸ்தானின் எல்லையோரத்தில் குவிக்கப்பட்டு உள்ளன.
எல்லையோரத்தில் உள்ள மலைக்குன்றுகளில் அமெரிக்கா துருப்புகள் நிலை கொண்டு உள்ளன. பாகிஸ்தானை இணைக்கும் நெடுஞ்சாலையை அமெரிக்க ராணுவம் மூடிவிட்டது. இதை பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது. நிலைமையை கண்காணித்து வருவதாக தெரிவித்து உள்ளது.

0 கருத்துகள்: