தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.10.11

அமெரிக்கா யார் எங்களை தீர்மானிக்க பாகிஸ்தான் கேள்வி


பாகிஸ்தான் இறைமையுள்ள நாடு, எமது நாடுபற்றி எம்மைவிட மேலாக சிந்திப்பதற்கு அமெரிக்கா யார் என்று பாகிஸ்தான் படைத்துறை தலைவர் அஸ்பாக் கயானி கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தானின் வடக்குப் புலத்தில் செயற்படும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களை அடக்கினால் மட்டுமே ஆப்கானில் அமைதி நிலவும் என்று அமெரிக்கா தெரிவிக்கிறது. இதன் காரணமாக பாக் வடபகுதி வஸிறிஸ்தான் பகுதியில் தொடர்ச்சியான குண்டு வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தானின்
ஆள்புல எல்லை
குறித்து பாகிஸ்தானுக்காக தீர்மானமெடுக்க அமெரிக்கா யார் என்று அவர் வினவினார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் படைத்துறை குழுவினரிடையே பேசும்போது அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். வஸிரிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் மீது எப்படி, எப்போது நடவடிக்கை எடுப்பதென முடிவு செய்ய பாகிஸ்தானுக்கு தெரியும் என்று அவர் குறிப்பிட்டார். தான் செய்யும் செயல்களை ஒன்றுக்கு பத்துத் தடவைகள் யோசித்து செய்ய வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு உண்டு என்றும் வலியுறுத்தினார்.

0 கருத்துகள்: