தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.10.11

திருச்சி மேற்கு:இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி!


திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில், 14608 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதாகத் தமிழகச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி
பெற்று அமைச்சரான மரியம்பிச்சை கார் விபத்தில் இறந்ததையடுத்து, காலியாக இருந்த திருச்சி மேற்கு தொகுதிக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத் தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் பரஞ்சோதி, தி.மு.க. சார்பில் கே.என்.நேரு உள்பட மொத்தம் 16 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலையில், தேர்தல் பார்வையாளர் பதக், கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது.
மொத்தம் 13 சுற்றுக்கள் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், அ.தி.மு.க. வேட்பாளர் 68,804 வாக்ககளும், தி.மு.க. வேட்பாளர் 54,196 வாக்குகளும் பெற்றுள்ளதாகவும், இதனடிப்படையில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி 14608 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் நேருவை வெற்றி கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத் தெர்தலின் பொதம் அதிமுகவினர் அதிகளவில் ஊழல் பரிந்துள்ளதாகத் திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: