தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.2.12

புற்று நோய் உலகளாவிய ரீதியில் பலத்த வேகமெடுத்துள்ளது


புற்று நோய்க்கு மருந்து வருகிறது, அதற்கான வைத்தி யத்தில் முன்னேற்றம் வருகிறது என்று செய்திகள் அவ் வப்போது வருவது ஒரு வேடிக்கையாக மாறிவிட்டது தெரிந்ததே. ஆனால் நிஜத்தில் நிலமை அவ்வாறு இல் லை, உலகளாவிய ரீதியில் புற்று நோய் கட்டு மீறி பெ ரு கிவிட்டதாக ஐ.நாவின் உலக சுகாதார சபை கவலை தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு உலகம் முழு வதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை 12.7 மில்லியனாக இருந்தது, இது எதிர்வரும் 2030 ல்
21.4 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. உலகத்தில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான விரிவான வேலைத்திட்டங்களை உடனடியாக முடுக்கிவிட வேண்டும் என்றும் கேட்டுள்ளது. புற்றுநோயின் தாக்கம் ஏழை நாடுகளையும், இடைநிலை பொருளதாரம் உள்ள நாடுகளையும் மிக மோசமாகத் தாக்கி வருகிறது. சரியான வைத்திய வசதிகள் இன்மை, புற்று நோய் வந்தவனை அந்த நோயைவிட மோசமாக வருத்தி கொள்ளையடிக்கும் பிரபல வைத்திய நிறுவனங்கள் என்று ஏகப்பட்ட குறைபாடுகள் நிலவுகின்றன. ஆகவேதான் புற்று நோய்க்கான பரந்துபட்ட வேலைத்திட்டத்தை அரசுகள் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.
இது இவ்விதமிருக்க ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள பட்டினி மரணங்களை தடுப்பதற்கான நிதி சேகரிப்பு கடந்த வாரம் முழுவதும் டென்மார்க்கில் நடைபெற்று நேற்று உச்சக்கட்டத்தை அடைந்தது. தொலைபேசிகள் மூலம் அழுத்தி பணம் பெறும் வேலையை டென்மார்க் தொலைக்காட்சி செய்தது. இவர்களுடன் மேலும் 12 நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி மொத்தம் 82 மில்லியன் குறோணர்களை ஆபிரிக்க மக்களுக்காக திரட்டினார்கள். ஆனால் இதில் ஆபிரிக்காவில் பாதிக்கப்பட்டவரின் பட்டினியை தீர்க்க எத்தனை வீதம் சரியாக பயன்படுகிறது என்ற கேள்வி நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவோரின் இமாலய சம்பளம், செலவுகள் போன்றவற்றை கணக்கிட்டால் சுண்டங்காய் காற்பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற நிலை இருப்பதாக விமர்சனங்களும் உள்ளன.

0 கருத்துகள்: