தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.2.12

துபாய் ஓட்டலில் சர்வராக வேலை பார்த்த இந்தியருக்கு ரூ.1.33 கோடி பரிசு.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பொட்டன்கல் அகமது. து பாயில் உள்ள ஒரு ஓட்டலில் சர்வராக பணியாற்றினா ர். மாதம் 17 ஆயிரம் ரூபாய் சம்பளம். இவருக்கு திரும ணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். 4 மாதங்களுக்கு முன் அவருடைய செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், கோடீஸ்வரர் குலுக்கலில் உங்களுக்கு 1 மில்லி
யன் திர்ஹாம் (ரூ.1.33 கோடி) பரிசு விழுந்துள்ளதுÕ என்று இருந்தது. அவ்வளவு தான்... அவருக்கு தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது. சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் ஒரு சிறுதொகையை ஐக்கிய அரபு எமிரேட்டின் தேசிய சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்துள்ளார்.  இதுவரை மொத்தம் 40000 ரூபாய்க்கு சேமிப்பு பத்திரம் வாங்கி உள்ளார். சேமிப்பை ஊக்குவிக்க தேசிய சேமிப்பு பத்திர அமைப்பு நடத்தும் Ôகோடீஸ்வரர் குலுக்கலில்Õதான் அகமதுவுக்கு பரிசு விழுந்துள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு அகமது பிரபலம் ஆகிவிட்டார்.

பிறகு முறைப்படி பணத்தை பெற அகமது முயற்சித்தார். ஆனால், அவருக்கு ஆங்கிலம் புரியவில்லை. அரைகுறை இந்தியில் பேசினார். அரபு மொழியும் தெரியவில்லை. இதனால் சேமிப்பு பத்திர நிறுவன அதிகாரிகளுடன் அவரால் சரளமாக பேச முடியவில்லை. இதனால் பரிசு பணம் கிடைப்பதில் தாமதமானது. அதற்குள் விசா காலமும் முடிந்துவிட்டது. இந்தியாவுக்கு திரும்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டார். இந்த நேரத்தில்தான் இவரது பரிதாப நிலை குறித்து பத்திரிகைகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. அதை பார்த்த தேசிய சேமிப்பு பத்திர துறை தலைவர் காசிம் அலி அலி உடனடியாக மலையாளம் தெரிந்த ஒரு அதிகாரியை ஏற்பாடு செய்தார். அவரை அகமதுவுடன் பேச வைத்து பண பரிமாற்றத்துக்கு நடவடிக்கை எடுத்தார். அதன்பின் கடந்த 29ம் தேதி அகமதுவை அழைத்து ரூ.1.33 கோடிக்கான செக்கை கையில் கொடுத்தனர். அப்போதுதான் அவருக்கு உயிரே வந்தது.

இதுகுறித்து அவர் கூறியதாவது: துபாய் ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தேன். நான்கு மாதத்துக்கு முன்பு இரவு 7.30 மணி இருக்கும். தேசிய சேமிப்பு பத்திர நிறுவனத்திடம் இருந்து எனக்கு வந்த எஸ்எம்எஸ்சில் ஒரு மில்லியன் திர்ஹாம் பரிசு என்று பார்த்தவுடன். எனக்கு மயக்கமே வந்துவிட்டது. வேலை முடித்து விட்டு, எஸ்எம்எஸ்ஸை எனது நண்பர்களிடம் காட்டினேன். அவர்கள் உடனடியாக அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது பரிசு கிடைத்திருப்பது உண்மைதான் என்பது உறுதியானது. இவ்வளவு பணம் கிடைத்த பிறகு யார்தான் சர்வர் வேலை செய்வார். உடனடியாக வேலையை ராஜினாமா செய்து விட்டேன். ஆனால், பணம்தான் கிடைக்கவில்லை. 4 மாதமாக வேலையும் இல்லாமல் பரிசும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு விட்டேன். இப்போது பணம் கிடைத்து விட்டது. முதலில் நான் வேலை செய்த அதே ஓட்டலில் என் நண்பர்களுக்கு மிகப்பெரிய விருந்து அளிக்க போகிறேன். அதன்பின் அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்கிறேன். மீண்டும் துபாய் வந்து மளிகை கடை ஆரம்பிப்பேன். இவ்வாறு அகமது கூறியுள்ளார்.

0 கருத்துகள்: