தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.2.12

துண்டிக்கப்பட்ட கையுடன் ஹெலிகாப்டரில் ஏற்றிச் செல்லப்பட்ட பேருந்து ஓட்டுனர்

ஈப்போ, பிப்ரவரி 5- மூகமூடி அணிந்து வந்த ஆடவர்களால் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில் பேருந்து ஓட் டுனரான ராஜேந்திரன் அரச மலேசிய கடல்படை ஹெலி காப்டரில் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.51 வயதான ராஜேந்திரனுக்கு ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க முடியா மல் போனதும் மருத்துவர்கள் அவரது
கையை இணைத்து விடவேண்டும் என்ற முயற்சியில் அரச மலேசிய கடல் படையின் உதவியை நாடியுள்ளனர். பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்.முன்னதாக, காலை 7.30 மணியளவில், சித்தியவான் தாமான் ராஜா மூடா மூசாவில் அமைந்துள்ள அவரது குடும்ப உறவினர் என நம்பப்படும் முகமூடி அணிந்த ஆடவர்கள் இருவர், கூர்மையான ஆயுதத்தால் ராஜேந்திரனைத் தாக்கியதால் அவரது கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்டது. பின்னர் அவர் அண்டை வீட்டுக்காரரின் உதவியுடன் ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையிலிருந்து 50 நிமிடத்தில் ராஜேந்திரன் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்.இதனிடையே, ராஜேந்திரனைத் தாக்கிய ஆடவர்களைத் தேடும் நடவடிக்கையைப் போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

0 கருத்துகள்: