தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.2.12

கோழிக்கறியுடன் 5 சப்பாத்தி 25 ரூபாய்; செஃப்களான கேரளா சிறைக்கைதிகள்!

திருவனந்தபுரம், பிப். 5-  சிறைக்கைதிகள் சிறையில் பல்வேறு வேலைகள் செய்வதாக கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் , நாவுக்கு சுவையான உணவையும் அவர்கள் தயாரித்து விற்கி றார்கள் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். இந்த ஆச்ச ரியம் நடப்பது கேரளா சிறைகளில்தான்.தற்சமயம் திருவனந் தபுரத்தில் உள்ள பூஜப்புரை மத்திய சிறை, திருச்சூரில் உள்ள வியூர் மத்திய சிறை, கோழிக்கோட்டில் உள்ள மாவட்ட ஜெயி ல் ஆகிய 3 சிறைகளில் கைதிகள் சப்பாத்தி,
கோழிக்கறி மற்றும் சைவ குருமா தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். 5 சப்பாத்தியும், கோழிக்கறி குருமாவும் 25 ரூபாய்தான். 5 சப்பாத்தியும், சைவ குருமாவும் 20 ரூபாய்தான். இந்த சப்பாத்தி மற்றும் குருமா வாங்க கூட்டம் அலைமோதுகிறது.
தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான சப்பாத்திகளை அவர்கள் தயாரித்து விற்கிறார்கள். மொத்தமாக ஆர்டர் கேட்பவர்களுக்கும் தயாரித்து கொடுக்கிறார்கள். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த சப்பாத்திகள் தயாரித்து விற்பனைக்கு வந்த உடனே விற்று தீர்ந்து விடுவதுதான். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த சப்பாத்திகள் கிடைக்கும். திருவனந்தபுரத்தில் சிறை வளாகத்தில் மட்டுமல்லாது மேலும் 3 இடங்களிலும் இந்த சப்பாத்திகள் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன.
2 மாதங்களுக்கு முன்னர் தமிழ்ப்பட டைரக்டரும், நடிகருமான சேரன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது வெறும் சப்பாத்தி மட்டும் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த (ஜனவரி) மாதம் முதல்தான் கோழிக்கறியுடன் கூடிய குருமா மற்றும் சைவ குருமாவும் விற்கப்படுகிறது.

0 கருத்துகள்: