தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.2.12

எகிப்தியருக்கும் சிரியருக்கும் சன்னதம் சிரசில் அடித்தது !


உதைபந்தாட்டப் போட்டியில் அரசியலை நுழைத்து 74பே ரை படுகொலை செய்த எகிப்திய அரசியல் உச்சக்கட்டமா க சதுராட ஆரம்பித்திருக்கிறது. தலைநகர் கெய்ரோவில் உள்ள வரித்திணைக்கள கட்டிடம் தீப்பற்றி எரிந்து கொ ண்டிருக்கிறது. நேற்று சனி அதிகாலை உணவு முடித்துக் கொண்டு வீதிக்கு இறங்கிய மக்கள் போலீசார் மீது கற்க ளை வீசியடித்தார்கள். கடந்த மூன்று தினங்களாக நடை பெறும் ஆர்பாட்டங்கள் கட்டுமீறிய நிலைக்கு போயுள்ள து. எரிந்து கொண்டிருக்கும் கட்டிடம் தாகிர்
பிளேசிற்கு சிறிது தொலைவில் இருக்கிறது. எகிப்தில் இடம் பெற்ற ஆட்சி மாற்றமும் புரட்சியும் சரியான பக்கத்தில் சுழலாமல் ஆபத்தான திசையில் திருப்பி விடப்பட்டுள்ளது. எகிப்தியர்களின் மடைத்தனமான நகர்வு சிறீலங்கா போல முழு நாட்டையும் தீ மூட்டி கொழுத்தப் போகிறது. சர்வாதிகார மன்னன் லூயியிடமிருந்து நாட்டை பாதுகாக்க பிரான்சில் நடந்த புரட்சி கடைசியில் அவனை விட மோசமான சர்வாதிகாரியான நெப்போலியனின் கையில் விழுந்தது போல, எகிப்து புரட்சியும் இன்னொரு அமெரிக்க அடிமையான சர்வாதிகாரியின் வரவுக்கு செங்கம்பளம் விரிக்கப்போகிறது.
இது இவ்விதமிருக்க சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டின் படைகள் இன்று கோம்ஸ் நகரத்தில் நடாத்திய தாக்குதல்களில் 217 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். சிரியாவுக்கு எதிராக ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் நேற்று தீர்மானம் வாக்களிக்கப்பட்ட கோபத்தில் சிரிய படைகள் சகட்டுமேனிக்கு துப்பாக்கிகளைத் தட்டிவிட்டுள்ளன. பெரும்பாலான தாக்குதல்களில் கிரனைட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மரண எண்ணிக்கை மணிக்கு மணி அதிகரிப்பதாக மனித உரிமைகள் கழக உறுப்பினர் ரமி அப்டிர் ரகுமான் தெரிவித்தார். மத்திய கிழக்கு மிகப்பெரும் குழப்பமான காலத்தை சந்தித்துள்ளது. இந்தச் சூறாவளி சூல் கொண்டது வடக்கு ஆபிரிக்கா மத்திய கிழக்கு ஆக இருந்தாலும் இது வீசியடிக்கப்போவது இந்தியா, சீனா நாடுகளை நோக்கியே என்பதை வெகு விரைவில் உணர முடியும்.

0 கருத்துகள்: