குவைத்சிட்டி, பிப். 5- குவைத் நாட்டில் முன்னாள் பிர தமர் நசீர் முகமது அல் அகமது அல்-சபாஹ் எதிராக போராட்டம் நடைபெற்றதை அடுத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்முடிவு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 50 இடங்களில் 34 தொகுதிகளை இஸ் லாமிஸ்ட் தலைமையிலான எதிர்க்கட்சி கைப்பற்றி அமோக
வெற்றி பெற்றது. மலைவாழ் மக்களை அதிகம் கொண்ட 20 இடங்களி ல் அந்த கட்சி 18 இடங்களை கைப்பற்றியது.கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் 4 பெண் எம்.பி.க்கள் இருந்தார்கள். ஆனால் இந்த தேர்தலில் ஒரு பெண் கூட வெற்றி பெறவில்லை. முன்பு 9 எம்.பி.க்களை பெற்றிருந்த சன்னி இஸ்லாமிஸ்டுகள் தற்போது 23 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதே நேரத்தில் லிபரல் கட்சியினர் 3 இடங்களை பறிகொடுத்து 2 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளனர்.
கடந்த ஆட்சியில் 13 எம்.பி.க்கள் மீது லஞ்ச, ஊழல் புகார் கூறப்பட்டதே இந்த தேர்தலில் ஆளும் கட்சியின் படுதோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக