தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.2.12

ஈரான் மீது விரைவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம்: அமெரிக்கா சூசக தகவல்

வாஷிங்டன், பிப். 5-  ஈரான் நாடு மலைப்பகுதியில்பூமி க்கு அடியில் சுரங்க அறைகளில் அணு குண்டு தயாரிக் கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா, இஸ்ரே ல் நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் ஈரா ன் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொரு ளாதார தடை விதித்துள்ளன. கச்சா எண்ணெய் வாங்க கூடாது என வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையி ல் ஈரான்
மீது இன்னும் சில மாதங்களில் இஸ்ரேல் ராணுவ தாக்குதலை நடத் தலாம் என அமெரிக்க ராணுவ மந்திரி லோகன் பனேட்டா கருதுவதாகவும், இந்த தாக்குதல் ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதத்தில் நடக்கும் என்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் அமெரிக்கா-இஸ்ரேல் தள்ளிவைத்த ராணுவ கூட்டு பயிற்சியை விரைவில் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளன. எனவே அது தாக்குதலுக்கு இஸ்ரேல் தாயார் ஆவதற்கான அறிகுறியாக தெரிவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மறுத்து விட்டது.

0 கருத்துகள்: