தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.2.12

பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு 4 மாநில முதல்வர்கள் எதிர்ப்பு


ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக தேசி ய பயங்கரவாத தடுப்பு மையம் மார்ச் 1-ந்தேதி தொட ங்குவதாக தகவல் வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர் ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர் ஜி இந்த திட்டம் மாநில அரசின் உரிமையை மத்திய அ ரசு பறிப்பது போல் இருக்கிறது.
அதனால் இத்திட்டத்தை கைவிடும்படி கடந்த பிப்.14-ந்தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்த தகவலை ஒடிசா முதல் வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார். இந்த அமைப்புக்கு எதிரான மம்தாவின் கருத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோனையும் நடத்தியுள்ளார்.
தற்போது இந்த பயங்கரவாத தடுப்பு அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, நிதிஷ்குமார், மற்றும் நவீன் பட்நாயக் ஆகிய 4 மாநில முதல்வர்கள் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளதாவது:- மாநில அரசின் உரிமையை மத்திய அரசு என்றும் பறிக்காது. மம்தா எழுதியாக கூறும் எதிர்ப்பு கடிதம் இதுவரை உள்துறை அமைச்சகத்துக்கு வந்து சேரவில்லை என்று கூறியுள்ளது.

0 கருத்துகள்: