தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.2.12

சிறிலங்கா இராணுவத்தின் விசாரணை அறிவிப்பு நம்பத்தகுந்தது அல்ல: மனித உரிமை கண்காணிப்பகம்

சிறிலங்காவில் நடந்து முடிந்த உள் நாட்டு யுத்தத்தி ல் இடம்பெற்ற மனித உரிமை மீறல் விவகாரங்கள் குறித்த இராணுவ விசாரணைகள் என்பது,  சிறிலங் கா அரசின் காலம் தாழ்த்தும் தந்திரோபாயமாகவே கருத வேண்டியுள்ளதாக மனித உரிமை கண்காணி ப்பகம் தெரிவித்துள்ளது.மார்ச் மாதத்தில் ஐக்கிய நா டுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஆரம்பிக் கப்பட
உள்ளநிலையில், இவ்வாறான விசாரணைக ள் குறித்த காலந் தாழ்த்திய அறிவிப்பு சர்வதேச

ரீதியான விசாரணைகளை தடு க்கும் நோக்கிலானதாக இருக்கலாம் எனவும் மனித உரிமை கண்காணிப்பகம்குறிப்பிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
சனல்4 ஆவணப்படம், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை என்பவற்றில் குறிப்பிடப்பட்ட யுத்தகால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐவர் அடங்கிய இராணுவ நீதிமன்றமொன்று நிறுவப்பட்டுள்ளதாக சில தினங்களின் முன் சிறிலங்கா இராணுவதரப்பில் அறிவிக்கப்பட்டது தொடர்பிலே மனித உரிமைக் கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது.
மனிதஉரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், குறிப்பிட்ட யுத்தமும், அதன்போது புரியப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களும், நிகழ்ந்து மூன்றாண்டு காலப் பகுதியை எட்டியுள்ள நிலையில், இதுவரையில் இது தொடர்பான விசாரணைகள் எதையும் ஆரம்பிக்காத சிறிலங்கா இராணுவம், திடீரென விசாரணை நடத்துவதாக அறிவிப்புச் செய்துள்ளது இயல்பானதாகவோ யதார்த்தமானதாகவோ கொள்ள முடியவில்லை என்றும், குற்றம் புரிந்ததாகத் தெரிவிக்கப்படும் இராணுவத்தினரை, அதே இராணுவக் கட்டமைப்பின் அதிகாரிகளால் நடத்தப்படும் விசாரணைகளால் பக்கச் சார்பற்ற ஒரு தீர்ப்பினை சுயாதீனமாக எட்ட முடியும் என்பது ஐயத்துக்கிடமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சர்வதேச அழுத்தங்கள் ஏற்படும் போதெல்லாம் அவ்வாறான அழுத்தங்களை சமாளிக்கும் நோக்கில் ஆணைக் குழுக்கள் மற்றும் விசாரணைக் குழுக்களை நியமிப்பது சிறிலங்காவின் வழமையான நடவடிக்கை எனவும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: