கடலூர் மாவட்டம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி பயிலும் சீத்தாராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவர், அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சித்ராவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்தார்.இந்நிலையில் காதலர் தினமான நேற்று முன் தினம் தனது காதலியை சந்தித்து பேசுவதில் சிக்கல் இருப்பதை உணர்ந்த சீத்தாராமன் பிறிதொரு நாளில் சந்திக்க திட்டமிட்டார். அதன்படி இன்று காதலியை அழைத்து கொண்டு பரங்கிப்பேட்டைக்கு பைக்கில் வந்த போது பரங்கிப்பேட்டையில் சீத்தாராமன்
– சித்ரா இருவரும் பிடிபட்டனர்.
முன்னதாக தனது காதலனுடன் மோட்டார் பைக்கில் செல்வதில் இருக்கும் சிரமத்தை கருதி , முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா-வை அணிந்துக்கொண்டு சித்ரா, பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதிக்கு செல்லும் நோக்கில் சீத்தராமனுடன் புறப்பட்டு வந்தார்.
பரங்கிப்பேட்டை நகரில் அவர்கள் இருவரும் பைக்கில் செல்வதை கண்ட சில இளைஞர்கள் சந்தேகமடைந்து பைக்-கை பின் தொடர்ந்து வந்து வழிமறித்து விசாரிக்கவே முன்னுக்கு பின் முரணான தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, இருவரின் கல்லூரி அடையாள அட்டையை பெற்று விசாரித்ததில், இக்குட்டு அம்பலமாகியது.
இதனை தொடர்ந்து பர்தா-வை கழற்றி விட்டு செல்லும்படி அவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டார்கள். இருவரும் சிதம்பரம் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தினை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.
சமீப காலமாகவே விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பர்தா அணிந்து நீதிமன்றத்திற்கு வருகை தருவது கொந்தளிப்பினை ஏற்படுத்தி சில இஸ்லாமிய இயக்கங்கள் அதற்காக போராட்டமெல்லாம் நடத்திக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அவரவர்களின் வீட்டிற்கு தெரியாத தங்களின் காதல் உள்ளிட்டவற்றிற்காக முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா-வை பிற மதத்தினர்கள் அணிந்து கொண்டு வலம் வருவது கண்டிக்கதக்கது என்று சம்பவ இடத்திலிருந்தவர்கள் கூறினார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக