தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.2.12

மலேசியா 3900 குடியுரிமை விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலனை

முறையான ஆவணங்கள் இல்லாத 3900 குடியுரிமை விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலிக்கப்படும். கோலா லம்பூர், பிப்ரவரி 15- மலேசியாவில் இன்னமும் முறையா ன குடியுரிமை ஆவணங்கள் இல்லாத 3900 விண்ணப்பங் களை உள்துறை அமைச்சு விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் கேட்டு க்கொண்டுள்ளார்.குறிப்பாக,
நம் நாட்டில் இந்திய சமுதாயத்தினர் குடியுரிமை, பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை ஆகியவை இல்லாத காரணத்தால் போதுமான  சலுகைகளைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.இப்பிரச்சனையைக் களையும் நடவடிக்கையாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தலைமையில் இந்தியர் நலனுக்கான அமைச்சரவை சிறப்புக் குழு மூலம் மைடப்தார் நடவடிக்கை நாடுதழுவிய அளவில் நடத்தப்பட்டது. இதில், சுமார் 15 பேர் தங்களின் விவரங்களைப் பதிந்துக்கொண்டனர். அவற்றுள் 9529 விண்ணப்பங்கள் அரசாங்கத்தின் பரிசீலனைக்காக வரப்பட்டதன்  மூலம் 5593 விண்ணப்பங்கள் முழுமையான ஆவணங்களைக் கொண்டிருந்தன. இந்த எண்ணிக்கையிலிருந்து 4023 பேருக்கு ஒரே ஆண்டில் குடியுரிமை பத்திரம் வழங்கப்பட்டது. மலேசிய வரலாற்றில் இத்தனை பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது இதுவே முதல் முறை என பிரதமர் தெரிவித்தார். இதனிடையே, மை டப்தார் நடவடிக்கையின் போது விண்ணப்பம் செய்தவர்களில் 3900 பேரின் விண்ணப்பங்கள் முழுமையான ஆவணங்களைக் கொண்டிருக்கவில்லை. எனினும், இவர்களின் பிரச்சனை விரைவில் தீர்வுக்காணப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.

0 கருத்துகள்: